குப்பைமேனி தைலம்
இந்த குப்பை மேனியிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் (தைலம்) சரும நோய்களை எதிர்க்கும் பண்புகள் கொண்டது. அனைத்து வகையான தோல் நோய்களுக்கும் பயன்படுத்தலாம்.
இந்த குப்பைமேனி எண்ணெய்யை இரவிலும் ஓய்வு நேரத்திலும் சருமத்தில் தினமும் பூசி உறவைத்து காலையில் குளித்து வந்தால், சொறி, சிரங்கு நீங்குவதுடன், சருமத்தின் நிறமும் மாறி பொலிவை தரும்.
குறிப்பாக, தடிப்பு தோல் அழற்சி, காயங்கள், சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள், தீப்புண்கள், அரிப்பு, தடிப்பு, எரிச்சல், இப்படி அனைத்துவிதமான நோய்களுக்கும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம்.